இளம் பெண் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை
இந்தியா பீகார் மாநிலம், புத்த கயா மாவட்டத்தில் உள்ள மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான இளம் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர்.
உடல் தகுதித் தேர்வு நடைபெற்றபோது, 26 வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
மயக்க நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது, ஓடும் ஆம்புலன்சிலேயே அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்த இளம்பெண், புத்த கயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மயக்க நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது, ஓடும் ஆம்புலன்சிலேயே அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்த இளம் பெண், புத்தகயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆம்புலன்சில் மூன்றுஇ நான்கு பேர் இருந்ததாகவும்இ அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். அந்த நேரம் சரியாக சுயநினைவு இல்லாததால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அழுது புலம்பியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்இ உடனடியாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விசாரணையில்இ ஆம்புலன்ஸ் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்தனர். அதில்இ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தாமதமாக சென்றது உறுதி செய்யப்பட்டது.
அடுத்த சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊர்க்காவல் படைக்கான உடல் தகுதித் தேர்வின் போது மயங்கி விழுந்த இளம் பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.