யுவதியின் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வீரசேகரகம பகுதியில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில் உயிரிழந்த நபரும் ஹல்தமுல்லவில் உள்ள சொரகுனே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறியதாகவும் இதன் போது உயிரிழந்த நபர் மீது யுவதி கத்திகுத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கத்தி குத்துக்கு இலக்கான இளைஞர் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிர் இழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளம் பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்