இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு: விரட்டியடித்த பொதுமக்கள்

களுத்துறையில் இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்குவை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பிக்கு சாதாரண ஆடையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்துக்கு மூன்று யுவதிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இதன்போது அவர் தங்கியிருந்த விகாரை அமைந்துள்ள இடத்திலுள்ள பிரதேசவாசிகளில் சிலர் தற்செயலாக அங்கு சென்றிருந்த சமயத்தில் பிக்குவைக் அடையாளம்கண்டுள்ளனர்.

இதன்போது அவரையும் அவருடன் வந்திருந்த யுவதிகளையும் காணொளி எடுத்து ஏனைய கிராம வாசிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் சுற்றுலா முடிந்து திரும்பி வந்த பிக்கு, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தங்கியிருந்த விகாரையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.