
இளம் குடும்பஷ்தர் எடுத்த தவறான முடிவு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் திருமணமான வெருகல் -மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் குடும்பஷ்தரே வீட்டில் வைத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
உயிர் இழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
