
இளம்பெண் மரணத்தில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்
இந்தியா – புதுச்சேரி கொடாத்தூர் மணவேலி ரோஜா நகரை சேர்ந்தவர்கள் அரவிந்த, மோனிகா தம்பதியினர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மாலை, மோனிகா தனது தாய் உண்ணாமலையிடம் தனது கணவருக்கும் தனக்கும் இடையே நடக்கும் பிரச்னையை கூறியுள்ளார். அடுத்த நாள் காலை உண்ணாமலை தனது மகளுக்கு கைத்தொலைபேசி மூலமாக பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர், திருக்கனூர் பகுதியில் உள்ள தனது மூத்த மகளான சரண்யாவை அனுப்பி மோனிகா வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அவரது அக்கா, மோனிகா வீட்டிற்கு சென்ற போது, தனது தங்கை திருமண புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
“தனக்கு குழந்தை இல்லை என தனது கணவர் தலையில் அடித்ததாகவும், உன்னால் குழந்தை பெற்று தர முடியாது அதனால் நான் வேறு திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்று கொள்கிறேன் உன் பொருட்களை எடுத்துக்கொண்டு போ என்று தனது கணவர் திட்டியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன்” என இரண்டு காணொளிகளை பதிவு செய்துள்ளார்.
மேலும் தனது கணவரை சும்மா விட கூடாது என்றும், அக்கா, தந்தையை நன்றாக பார்த்து கொள்ளும்படியும் அழுதபடியே தனது தாய்க்கு அவர் அந்த வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார். வீடியோக்களை ஆதாரமாக கொண்டு வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோனிகா உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பாட்டியும் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
