இளம்ஜோடியை பிணை கைதிகளாக பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பினர்

இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் அமைப்பினர், ஏராளமான பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இசை நிகழ்ச்சியின் அரங்குக்குள் பாராசூட் மூலம் குதித்த ஹமாஸ் அமைப்பினர், கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். மேலும், இளம் ஜோடி ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அந்த காணொலி இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் காசா அமைப்பினர் நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர், துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை மீட்ட காணொலியை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்