Last updated on April 7th, 2023 at 06:35 am

இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

 

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

பாடசாலை மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகம் செய்யும் இரண்டாம் கட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் Great tomorrow அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

சுமார் 65 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில், சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலய அதிபர் திருமதி ரிப்கா அன்சார், பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்சில் மற்றும் Great tomorrow அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்