இலஞ்ச வழக்கிலிருந்து விடுதலை : அமைச்சராக பதவியேற்றார் நிமல் சிறிபால டி சில்வா
துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச வழக்கில் இருந்து, அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி குழு அவரை நேற்று திங்கட்கிழமை விடுவித்திருந்தது.
இதனையடுத்து, அவர் இன்று துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
