இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சுமார் 63 பேர் இதுவரை கைது-பிரதமர் ஹரிணி
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சுமார் 63 பேர் 2025 ஆம் ஆண்டில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 அரசு ஊழியர்களும் அடங்குவர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 86 பேருடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சுமார் ஏழு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை மூன்று அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
