இலஞ்சம் பெற முயன்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்-

பொதுமகன் ஒருவரிடமிருந்து இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 5000 ரூபா பணம் பெற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், குறித்த இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்