இலஞ்சம் பெற்ற போது கையும் மெய்யுமாக பிடிபட்ட அதிபர்
நுவரெலியா – ராகம ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 1 50,000 ரூபா இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ராகம மத்துமாகல பிரதேசத்தில் 2025 ஆம் ஆண்டுக்கு சிறுமியொருவர் முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக பெண் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கும் போதே அதிபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.