இலஞ்சம் கோரிய அதிகாரி கைது
பனாகொட பிரதேசத்திலுள்ள கடையொன்றில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களை, வருங்கால வைப்பு நிதியுடன் (EPF) இணைக்காமல் கடையை நடத்துவதற்கு 400,000 ரூபாவை வர்த்தகரிடம் இருந்து இலஞ்சமாக கேட்ட அதிகாரியொருவரை கைது செய்ததாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த, தொழிலாளர் திணைக்களத்தின் கள அதிகாரி என கூறப்படும் 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடையில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு 11 இலட்சம் ரூபாவை (EPF) நிதியாக செலுத்த வேண்டியுள்ளதாகவும், அத்தொகையை செலுத்தாமல் இருக்க தேவையான வேலைகளை செய்வதற்கு 4 இலட்சம் ரூபா பணம் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்