இலங்கை வீரர் யுபுன் அபேகோனின் புதிய சாதனை
தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் அபேகோன், உலகின் 20வது அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த யூபுன் அபேகோன் தெற்காசியாவின் வேகமான மனிதர் மற்றும் ஆசியாவின் இரண்டாவது வேகமான மனிதர் என்ற பெயருக்கு உரித்தானவர்.
கடந்த கொமன்வெல்த் போட்டியிலும் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது