இலங்கை வீரர்களுக்கு அவசர அழைப்பு

டுபாயில் நடைபெற்று வரும் ILT20 தொடரில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை, எதிர்வரும் டிசம்பர் 20-ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 2 ஆம் திகதி வரை விளையாட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், ஜனவரி 7-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடர் மற்றும் எதிர்வரும் T20 உலகக் கிண்ண பயிற்சிகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி பெதும் நிஸ்ஸங்க, மஹீஷ் தீக்ஷன, கமிந்து மென்டிஸ், தசுன் ஷானக்க, நுவான் துஷார மற்றும் மதீஷ பத்திரண உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

மேலும் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரும் இந்த உத்தரவால் தொடரில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.