இலங்கை விமானப்படையின் 2ஆம் நாள் சாகசமும், கண்காட்சியும்

-யாழ் நிருபர்-

இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று புதன் கிழமை ஆரம்பமாகிய கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில், முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திரசில்வா, இலங்கை விமானப்படையின், படைத் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிட தக்கது.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]