இலங்கை வரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு
சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்காக இலங்கை பொலிஸ் பிரிவு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை என்றால், நேரடியாக தொலைபேசி எண்ணுக்கு அழைத்து விழிப்புணர்வு பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் சுற்றுலா மற்றும் கடல்சார் பிரிவுக்குப் பொறுப்பான டி.ஐ.ஜி தமயந்த விஜய ஸ்ரீயின் 071-8592651 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தேவையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
