இலங்கை வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஹி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஆபிரிக்காவுக்காவுக்கான விஜயத்தை தொடர்ந்து, அவர் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத்தரவுள்ளார்.

இந்த பயணத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சீன வெளியுறவு அமைச்சர், சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிட்வா பேரழிவுக்கு பின்னர் மீள்கட்டமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கான உதவியை சீன வெளியுறவு அமைச்சர் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.