இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எயார் சிப் சேவை

தெற்காசியாவில் முதன் முறையாக  இலங்கையில் எயார் – சிப் (Air- Ship) சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம்  சர்வதேச எயார் ஸ்பேஸ் (Air Space) நிறுவனத்தின்தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் கி தலைமையில்  இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள நிலாவெளிஇமட்டக்களப்பில் உள்ள  பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்