
இலங்கை முழுவதும் நடந்து சென்று மரங்களை நடும் வெளிநாட்டு பிரஜை
இலங்கை முழுவதும் நடந்து சென்று உலக நாடுகளை சேர்ந்த பல வகையான மரங்களை தனது தனிப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்து நடுகை செய்யும் பணியில் வெளிநாட்டவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவை சேர்ந்த ஆண்டனி ஸ்டோன் (Anthony Stone) என்பவரே இந்த மகத்தான பணியை செய்து வருகிறார்.
கொழும்பில் இருந்து தெவுந்தர முனை வழியாக கதிர்காமம் வரை நடந்து சென்று அங்கிருந்து கண்டி வழியாக பருத்தித்துறை வரை நடந்து சென்று மரம் நடும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
ஆண்டனி ஸ்டோன் அவரது சொந்த யூடியூப் சேனலில், அவர் பயணம் செய்யும் நாடுகளின் வீடியோக்களை வெளியிடுகிறார். அதில் வரும் பணத்தில் இந்த வெளிநாட்டவர் உலக நாடுகளில் மரம் நட்டு வருகின்றார்.
இந்த நாட்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடப்படுகின்றது.

