இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு மண் தூர்வாரல் கலம்
இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒரு மண் தூர்வாரல் கலத்தை கொள்வனவு செய்தல் தொடர்பில் கிரய – பயன்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்த கூட்டுத்தாபனம் வருடாந்தம் 183,000 கனமீற்றர் மணல் அகழ்வு செய்ய வேண்டியுள்ளது.
குறித்த அகழ்வுக்காக தனியார் துறையிலிருந்து சேவை பெறும் போது 500 மில்லியன் ரூபா செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேற்குறித்த கூட்டுத்தாபனத்துக்கு மண் தூர்வாரல் கலமொன்றைக் கொள்வனவு செய்தல் நீண்டகாலப் பொருளாதார அடிப்படையில் நன்மையளிக்குமென உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மண் தூர்வாரல் கலத்தை கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் களப்பு பேணுகை மற்றும் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அறுகம்பே, நந்திக்கடல், நாயாறு, லங்கா பட்டுன போன்ற களப்புகளில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.
அதற்கமைய, இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு ஒரு மண் தூர்வாரல் கலத்தை கொள்வனவு செய்வதற்காக மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.