இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அதன் பொறியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் நேற்று (16) முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்தும் போராட்டத்தின் முதற்கட்டம் நிறைவடைந்த நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.