இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியளிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

இது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் முதலாவது சிறிய செலவின நிதி வசதி திட்டமாகும்.

இந்த நிதியுதவி புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் வழிவகுக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்ஃபுமி கடோனோ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்