இலங்கை போதைப்பொருள் வியாபாரி உட்பட 5 கைதிகளுக்கு மரண தண்டனை

குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் 2015 ஆம் ஆண்டு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.