இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில்  குறித்த பதவி வெற்றிடத்திற்கு உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, உவைஸ் தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.