இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷின் சட்டோகிராம் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் 1 – 0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.