
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த தமிழ் மாணவன்
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பல வீரர்களை தேசிய அணிக்கு அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது.
பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இப் பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
