
இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தயாரிப்புகள் வர்த்தக அமைச்சரின் கண்காணிப்பிற்கு
வர்த்தகம், வாணிபத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஜா-எலயில் அமைந்துள்ள இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை ஈடுபட்டார்.
கடந்த அரசாங்கத்தின் போது கலைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை திரிபோஷா நிறுவனம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சுகாதார அமைச்சின் கீழ் மீண்டும் நிறுவப்பட்டுள்ளுத.
மேலும் சமீபத்திய அமைச்சரவை மாற்றத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வர்த்தகம், வணிபத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதன் போது தொழிற்சாலை வளாகத்தை கண்காணிப்பு செய்ததைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் அமல் அத்தநாயக்க மற்றும் அதன் இயக்குநர்கள் குழு, திரிபோஷா நிறுவனத்தை அறிமுகப்படுத்தி, தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
