
‘இலங்கை தின’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு
‘இலங்கை தின’ தேசிய நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் மீட்பு பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
குறித்த நிகழ்வை நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 14 திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சமூகங்களிடையே புரிந்துணர்வை வளர்ப்பதற்கும், இணக்கமான நாட்டை உருவாக்குவதற்கும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2025 வரவு செலவு திட்ட உரையில் இந்த விடயம் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
