
இலங்கை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலையில் வேட்புமனு தாக்கல்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.
தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் தலைமையில் இவ் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இம்முறை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலையிலுள்ள மூன்று சபைகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும்.இதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
