இலங்கை தமிழரசுக் கட்சி – இலங்கைக்கான சீனத்தூதுவர் சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், சீனத் தூதுவருடன் காத்திரமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களது கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகச் சுமந்திரன் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்