
இலங்கை கடற்படையின் உன்னதமான மனிதாபிமானம் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாராட்டு
திருகோணமலையில் இந்திய கடற்படை மாலுமி ஒருவரை மருத்துவ காரணங்களுக்காக சரியான நேரத்தில் வெளியேற்றுவதற்கு உதவியதற்காக இலங்கை கடற்படை அதிகாரிகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாராட்டியுள்ளது.
வெளியேற்றப்பட்ட நபர் ஐஎன்எஸ் சஹ்யாத்ரியின் (எஃப்49) ஷிவாலிக் கிளாஸ் ஸ்டெல்த் மல்டி-ரோல் (INS Sahyadri (F49), a Shivalik-class stealth multi-role frigate) போர் கப்பலின் இந்திய கடற்படை மாலுமி என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
“இலங்கை கடற்படை புரிந்த சரியான மற்றும் விரைவான உதவியானது குறித்த இந்திய மாலுமியை காப்பாற்ற உதவியது. இது இலங்கை கடற்படையினரிடையே உள்ள நல்லெண்ணம் மற்றும் தோழமை உணர்வின் மற்றொரு எடுத்துக்காட்டு” என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

