இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில், நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது.
இதேநேரம் அதிக பயணிகள் பயணிக்கும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
