இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை!

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று சனிக்கிழமை மோதவுள்ளன.

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா அணி 5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளன.

நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளைப் பெற்று 5ஆவது மற்றும் 6ஆவது இடத்தை பிடித்துள்ளன.

இலங்கை மகளிர் அணி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டதால் புள்ளியைப் பெற்று 7ஆவது இடத்தை பிடித்துள்ளது.