இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.
ஹராரே மைதானத்தில் இடம்பெற்றுவரும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.