இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

 

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பாப்வே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை செலவிட்டமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையை, இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இரு அணிகளுக்குமிடை யிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போதும் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.