இலங்கையை சேர்ந்த மூவர் இந்தியாவிற்கு அகதிகளாக புலம்பெயர்வு
இந்தியாவின் தனுஷ் கோடி நகருக்கு இலங்கையை சேர்ந்த 3 நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் மன்னார் கடற்பரப்பினூடாக 46 வயது கணவன், 44 வயதுடைய மனைவி மற்றும் 18 வயதுடைய மகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலான காலப்பகுதியினுள் 253 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்