இலங்கையில் 5ஜி அறிமுகம் செய்வதில் சிக்கல்

இலங்கையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பெருமளவு செலவுகள் ஏற்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் எப்பொழுது இலங்கையில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

எவ்வாறெனினும், அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பாரியளவில் முதலீடு செய்ய நேரிடும் எனவும் இந்த சேவைக்கான கட்டணங்களும் அதிகமாக காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.