இலங்கையில் மறுசீரமைப்பை விரைவுபடுத்த உலக வங்கி வலியுறுத்து

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக, நாட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பை (Structural Reforms) வேகப்படுத்துவது அத்தியாவசியம் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, அரசாங்கத்தால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள மறுசீரமைக்கு செயல்முறைக்கு புதிய உத்வேகம் (New Momentum) அளிக்கப்பட வேண்டும் என்று உலக வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்ட தேசிய பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker) சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, சுங்க நிர்வாகத்தை மேம்படுத்துதல், மேலதிக வரிகளை மறுசீரமைத்தல் மற்றும் முதலீட்டு சட்ட கட்டமைப்பை நவீனமயமாக்குதல் போன்ற மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இந்த மறுசீரமைப்புகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உலக வங்கி எடுத்துரைத்துள்ளது.