இலங்கையில் மர்ம ஒலி: ஏற்படவுள்ள ஆபத்து

மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்து வரும் மர்ம சத்தம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில், அது குறித்து உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் வேண்டுகோளுக்கமைய, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் தலைவரும், புவியியல் பேராசிரியருமான அதுல சேனாரத்னவின் பங்களிப்புடன், பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை அதிகாரிகளால் இந்த நிலம் தோண்டப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

மர்ம ஒலி வரும் பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் ஏரி இருந்தமையினால் அந்த பகுதிக்கு அடியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அது தீவிரமான சூழ்நிலை இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளார்.
எனினும் அது எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமையாக மாறும் நிலை காணப்படுவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.