இலங்கையில் நோன்பு ஆரம்பிக்கும் தினம் அறிவிப்பு!
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று வெள்ளிக்கிழமை தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷஹ்பான் மாதத்தை நாளை பூர்த்தி செய்யுமாறும்,
நாளை மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாவதாகவும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் பிரதித் தலைவர் மெளலவி ஹிஸாம் அல்பத்தாஹி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் மாநாடு நடைபெற்றது.