இலங்கையில் தேயிலை தொழிலை அழிக்க சதித்திட்டம்

உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் பற்றாக்குறையால் தேயிலை தொழிலாளர்கள் இந்த நாட்டில் நிர்க்கதியாக உள்ளதாக, நியாயமான தேயிலை இலை விலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் வசந்த அல்விஸ், கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இலங்கையில் தேயிலை தொழிலை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை இறக்குமதி செய்து, மீள் ஏற்றுமதி செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.