இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பெரியவர்கள் புகை பழக்கத்துக்கு அடிமை

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக வருடாந்தம் சுமார் 22ஆயிரம் மரணங்கள் பதிவாவதாக மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் வைத்தியர் சஜீவ ரணவீர தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நிகழும் மரணங்களில் 83% தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன. இவற்றுக்கான பிரதான நான்கு காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்
இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பெரியவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் உலகில் ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் ஒரு மரணம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.