இலங்கையில் சீன நாட்டவர் குழு ஒன்று தொழிலதிபரை கடத்தி பாரிய கொள்ளை!
இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினர் குழு ஒன்று சக சீன தொழிலதிபர் ஒருவரை கடத்திச் சென்று சுமார் 60,000 அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் குறித்த தொழிலதிபர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் கடத்தப்பட்டார், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் ஒரு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு, ஒரு நாள் முழுவதும் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு அவரை அடைத்து வைத்து, அவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை ஒன்லைன் மூலமாக கொள்ளையடித்ததாக தெரிய வருகின்றது.
60,000 அமெரிக்க டொலர்களை தொழிலதிபரிடமிருந்து கொள்ளையடித்த பின், அடுத்த நாள் சனிக்கிழமை அவரை ஒரு வீதியில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
கடத்தலின் போது ஏற்பட்ட காயங்களுக்கு, பாதிக்கப்பட்டவர் நாரஹேன்பிட்டியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சகிச்சை பெற்றுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் தொழிலதிபரான குறித்த சீன நாட்டவர் முறைப்பாடு செய்தார்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
