
இலங்கையில் சர்வதேச பாடசாலை ஆசிரியரின் அநாகரிக செயல்
பண்டாரவளை பகுதியில் சர்வதேச பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் பாடசாலை மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த ஆசிரியரை பெற்றோர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் குறித்த ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசியில் ஏனைய ஆபாச காணொளிகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்