இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் 15 சதவீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சுமார் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் தடுப்பூசிகளை தொடர வேண்டும் என அதன் கொரோனா இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொரோனா தொற்றின் திரிபான ஓமிக்ரோனின் துணை வகையாக அடையாளம் காணப்பட்ட பிஏ-5 என்ற புதிய வகை வைரஸ், இதய செல்களை சேதப்படுத்துகிறது என்பதை போர்த்துகீசிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்ததாக, சர்வதேச ஊடகமான ராய்ட்டர்ஸ் நேற்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 143 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், நேற்று வெள்ளிக்கிழமை 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
