இலங்கையில் கார்களின் விலை அதிகரிப்பு

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலை தொடருமானால் வாகனங்களின் விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.