இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.
இலங்கையானது உலகில் எழுத்தறிவு வீதம் அதிகம் உள்ள நாடாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் கடல்சார் பயிற்சிக் கல்லூரி ஒன்றினை இலங்கையில் நிறுவுவது குறித்து ஆய்வு செய்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆரேலியன் மெயில்லெட் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகாரி கொமாண்டர் ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.