இலங்கையில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு

இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்கொண்டு வருவதாக, சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கின்றது.

தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் வைத்தியர் துஷானி டப்ரேரா தெரிவிக்கையில், எலிக்காய்ச்சல் பாக்டீரியா, நீர் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மண்ணில் வெளிப்படும் போது, உடலில் ஏற்படும் வெட்டுக்கள், பாதிக்கப்பட்ட தோல் அல்லது சளி சவ்வுகள் வழியாக உடலில் நுழைந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகுவதாக தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை பகுதிகள் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரையிலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் தொற்றுக்குகள் பொதுவாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது என்றும், பாதிப்புக்களைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.