
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 22 கரட் பவுண் ஒன்றின் விலை 155,000 ரூபாவாக உள்ளது.
மேலும், 24 கரட் பவுண் ஒன்றின் விலை 169,550 ரூபாவாக உள்ளது.
சர்வதேச சந்தையில் டொலரின் விலை உயர்வு காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
