Last updated on June 17th, 2023 at 12:43 pm

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

டொலரின் அண்மைய அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக 22 கரட் பவுண் ஒன்றின் விலை இன்று (ஜூன் 16) உள்ளூர் தங்க சந்தையில் ரூ.155,000 ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக, இலங்கை ரூபாய் மதிப்பு உயர்வைத் தொடர்ந்து 22 கரட் பவுண் ரூ.147,000 ஆக இருந்தது.

இதனிடையே, 24 கரட் தங்கத்தின் விலை ரூ.175,000 ஆக உள்ளது.

முன்னதாக,  24 கரட் தங்கத்தின் விலை உள்ளூர் தங்க சந்தையில் ரூ.160,000 ஆக இருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்